Pages

வியாழன், ஜனவரி 19, 2012


வன்தட்டினை பகுதிகளாக பிரிக்க Aomei Partition Assistant Professional மென்பொருள்.

வன்தட்டினை (Hard Disk) தனித்தனி பகுதியாக (C: D: E:) போன்று  பிரிக்க வேண்டுமெனில், கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நிறுவும் போதே பிரிக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவிய பிறகு வன்தட்டினை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதனை நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினுடைய உதவியுடனே செய்ய முடியும். அவ்வாறு நாம் செய்யும் போது ஒரு சில நேரங்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே பழுதடைய வாய்ப்புண்டு. இல்லை நம்முடைய வன்தட்டினை இழக்க நேரிடும். இதனை தவிர்க்க வேண்டுமெனில் நாம் வேறு மென்பொருளை நாட வேண்டும். இது போன்ற மென்பொருட்கள் அனைத்துமே பணம் செலுத்தி பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் பலவும் நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. Aomei Partition Assistant Professional என்ற மென்பொருளானது இலவசமாக கிடைக்கும்.
கீழுள்ள லிங்கிற்கு சென்று இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய ஈ-மெயில் முகவரியை உள்ளிட்டு Submit பட்டனை அழுத்தவும். பின் உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்கு மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பபடும். அந்த சுட்டியை பயன்படுத்தி மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் வன்தட்டினை Copy, Paste, Format போன்ற செயல்பாடுகளை செய்ய முடியும். இந்த மென்பொருளானது NTFS, FAT பைல் சிஸ்ட்டங்களை ஆதரிக்க கூடியது ஆகும். இந்த மென்பொருளின் மதிப்பானது $29.95 ஆகும்.
மென்பொருளை பதிவிறக்க http://www.tamilkanani.com/?page_id=1695
amma

புதன், ஜனவரி 18, 2012


கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்.

இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்)
குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.
கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.
நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.
ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.
சில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது.
எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும்.
நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.
கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.
கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.
எப்படிச் செய்வது?
உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.
அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும்
அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.
Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.
இப்போது கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது.
கணினி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

Motherboardன் System Bus பற்றி தெரிந்த கொள்வோமா?

கணினி மதர்போர்டில்ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு டேட்டாவைக் கடத்தும் பாதையையே பஸ் எனப்படுகிறது. இந்தப் பாதை மதர்போடிலுள்ள பிற பகுதிகளை சீபியூவுடனும் நினைவகத்துடனும் இணைக்கிறது.
இதனை இண்டர்னல் பஸ்(internal bus) எனவும் அழைக்கப்படும். அதேபோல் எக்ஸ்பேன்சன் பஸ் (expansion bus) எனற பகுதியும் உண்டு. இது சவுண்ட் காட், வீஜிஏ காட், மோடெம் போன்ற எக்ஸ்பேன்சன் போர்டுகள் சீபியூ மற்றும் நினைவகத்தை அணுகுவதற்கான பாதையாகும்.
இந்த இரு வகை பஸ்களும். எட்ரஸ் பஸ்(address bus)டேட்டா பஸ் (data bus)என இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். டேட்டா பஸ் என்பது டேட்டாவைக் கடத்தும் அதே வெளை எட்ரஸ் பஸ் எனப்படுவது டேட்டா எப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
பஸ்ஸின் அளவை அதன (width)அகலம் எனப்படும். ஒரே நேரத்தில் எவ்வளவு டேட்டாவைக் அனுப்ப முடியும் என்பதை இந்த பஸ் வித் தீர்மானிக்கிறது. உதாரணமாக 16 பிட் பஸ்ஸானது 16 பிட் கொண்ட டேட்டாவை கடத்தக் கூடியது.
ஒவ்வொரு பஸ்ஸும் இயங்கும் வேகத்தைkக்லொக் ஸ்பீட் (clock speed) எனப்படும். இது மெகா ஹேட்ஸில் இல் அளவிடப்படும். அதிக வேகம் கொண்ட பஸ் மூலம் விரைவாக டேட்டாவைக் கடத்த முடியும். அதன் காரணமாகஒரு அப்லிகேசன் வேகமாக இயங்கும்.
மேலதிகமாக தெரிந்து கொள்ள.

திங்கள், ஜனவரி 16, 2012


தர்மா மீட்டர்

சென்னை ஹோட்டலில்.. "மதுரை மல்லிப்பூ இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது... இன்னும் வரலையே...?" "மதுரை என்ன பக்கத்துலய இருக்கு.. உடனே கெண்டு வர.."

"ஏன் டாக்டர் இதென்ன கூத்து நீங்க ஞாபகமறதில உங்களுக்கே ஆபரேஷன் பண்ணி ரெண்டு கிட்னியையும் எடுத்துட்டீங்களாமே?" "அதை விட பெரிய கூத்து, ஏதோ ஞாபகத்துல, என் மேலயே ஒரு கேஸ் வேற போட்டுட்டேன் இதுக்கு என்ன சொல்றீங்க..?"

"என்னடா இவனேட கழுத்தறுப்பா பேச்சே.." "ஏன்டா என்னடா செல்றான்..?" "சாமிக்கு மொட்டை அடிக்கிறதா 8 முறை வேண்டிக்கிட்டானாம்.. 8 மொட்டையையும் ஒரே சமயத்தில் அடிச்சிட செல்லி அடம்புடிக்கிறான்.."!

நோயாளி: டாக்டர்! வாய்ல வச்சுப் பாக்கற தர்மா மீட்டருக்கும், நெத்தியில வச்சுப் பாக்கற தர்மா மீட்டருக்கும் என்ன வித்தியாசம்? டாக்டர்: டேஸ்ட் தான். . . . நோயாளி: ?!!!

தாய்: ஏன்டா தம்பியை உதைத்தாய்.. பாவம் எப்படி அழுகிறான் பார்! சிறுவன்: நீதானேம்மா தம்பியை வைத்து பந்து விளையாடுன்னு சொன்ன.. தாய்: அதற்கு? சிறுவன்: அவனைத்தான் பந்தாக வைத்து விளையாடினேன்.

விஞ்ஞானம் (தந்தை மகனுக்கு...)

ஆ.திருநாவுக்கரசன்
விஞ்ஞானம் -
அகல விரிந்த வீடு தடுத்து
அடுக்ககமாய் அதனை உயர்த்தி
நூற்றுக்கும் மேற்பட்ட கோடிக்கு
சோற்றுக்கு வழி செய்ய
விளை நிலம் காத்தது
விஞ்ஞானம்!
வியத்தகு விசயமெல்லாம் - நம்
விரல் நுனிக்கே
கொணர்ந்து சேர்த்தது
தொலைக்காட்சியில்
விஞ்ஞானம்!
நாம்
மூச்சு விட்ட எண்ணிக்கையினும்
"ரிமோட்டை"
முடுக்கிவிட்ட எண்ணிக்கை அதிகம்.
என் தந்தை
எனக்குச் சொன்ன கதையில்
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஏதோ ஓர் கிளியில்
இளவரசி உயிர் இருக்கும்
புராணம் புனைந்த கதையில்
அன்று!
சிசாவில் உயிர் அடைத்து
ஊசி மூலம் உடலில் ஏற்றியது
மருத்துவ விஞ்ஞானம் - இன்று!
சில உறுப்புகள்
சேதம் அடைந்தாலும்
சில்லரையாய் உற்பத்தி
செய்து தரும் விஞ்ஞானம்!
வந்து போக வசதியாய்
உந்து வாகனங்கள்
மின்சாரம், தொலைபேசி
மேனி எழில் சாதனங்கள்
மருத்துவம், பொறியியல் என்று
மனித மேம்பாட்டில்
மாபெரும் பங்காற்றி
பொற்காலம் படைத்து வந்த
விஞ்ஞானத்தை
போர்க்களம் படைக்க வைத்த
கயமையே அரசியல்.
விஞ்ஞானம் தின்று செரித்து
அணுகுண்டாய் எச்சமிட்டது - அரசியல்
எச்சத்தை அடை காப்போர்
அரசியல்வாதிகளும்
ஆதிக்க வெறியர்களுமே!
அவர்களுக்குச் சொல்,
நுரையீரல் முழுதும்
நல்ல காற்றை நிரைக்கவும்;
மனது முழுதும்
நல்ல கூற்றை நிறைக்கவும்;
இரண்டுமே வாழ்வை
இனிதாக்கும்.
தானியக் கிடங்குகள்
யுரேனியக் கிடங்காய்
உருமாறிப் போனது
பரிணாமம் அல்லடா
பரிதாபம்.
இந்த நிலை மாற்றுவாயா?
நொந்த மனம் தேற்றுவாயா?
இரத்தக் கறையோடுதான் பிறந்தோம்
இரத்தக் கறையோடுதான்
இறக்க வேண்டுமா?
 

Blogger news

Blogroll

About