Pages

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012


விண்டோஸ் 7 ( Windows 7 ) இன் புதிய வசதிகள்

விண்டோஸ் 7 ( Windows 7 )விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், விஸ்டா போல இல்லாமல் பல பயனாளர்களிடம் வரவேற்பைப்பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்த கம்ப்யூட்டரின் திறன் சற்று கூடுதலாக வேண்டும் என்றாலும், புதியதாக வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் கம்ப்யூட்டர்கள் இந்த தேவையை நிறைவேற்றுபவையாகவே உள்ளன. எனவே புதியதாகக் கம்ப்யூட்டர்கள் வாங்கிப் பயன்படுத்துவோர் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தங்கள் பணிகளைத் தொடங்குகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் பற்றி ஏற்கனவே இங்கு தரப்பட்டது.மேலும் சில புதிய வசதிகளை இங்கு காணலாம்.


விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஸ்லீப் மற்றும் ரெஸ்யூம் (தற்காலிகமாக நிறுத்திப் பின் மீண்டும் இயக்கும் வசதி) செயல்பாடு மிக நேர்த்தியாகவும் எந்த பிரச்னையுமின்றியும் செயல்படுகிறது. இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடிக்கடி நிறுத்தி இயக்க வேண்டிய தேவை இல்லை.

விண்டோஸ் லோகோ கீயுடன் வலது மற்றும் இடது ஆரோ கீகளை இயக்குகையில் அப்போதைய விண்டோ அந்த திசைகளில் ஒதுங்கி இடம் பிடித்து மற்ற விண்டோக்களுக்கு இடம் தருகிறது. இதனால் இரண்டு செயல்பாடுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு விண்டோவில் இன்டர்நெட் பிரவுஸ் செய்து கொண்டே, இன்னொன்றில் இமெயில் தொடர்புகளைக் காணலாம். ஒரேடாகுமெண்ட்டில் இரு வேறு இடங்களில் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம்.

திரைக் காட்சியை அப்படியே படம் பிடித்து பைலாக மாற்ற பல வழிகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்நிப்பிங் டூல் (Snipping Tool) என்ற ஒரு வசதியைத் தருகிறது. ஸ்நாப் ஷாட் எடுப்பது போல ஒரே கீ அழுத்தத்தில் இதனை மேற்கொள்ள முடிகிறது.

விண்டோஸ் 7, கம்ப்யூட்டரை புரஜக்டர் ஒன்றுடன் இணைத்து இயக்குவதை எளிதாக்குகிறது. விண்டோஸ் + ப்பி கீகளை அழுத்தினால், காட்சி கம்ப்யூட்டருக்கும் புரஜக்ஷன் ஸ்கிரீனுக்குமாக மாறுகிறது. இதில் இணைத்துத் தரப்படும் கால்குலேட்டரில் புதிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன. சயின்டிபிக் புரோகிராமர், புள்ளியியல் செயல்பாடுகள், யூனிட் மாற்றுதல் (கி.மீ –மைல், லிட்டர்–காலன், செல்சியல் – பாரன்ஹீட் ) போன்றவை தரப்பட்டுள்ளன.

இதில் தரப்பட்டுள்ள எக்ஸ்பி மோட் மிக மிகப் பயனுள்ளதாக இருப்பதாகப் பல பயனர்கள் தெரிவித்துள்ளனர். எக்ஸ்பியில் மட்டும் இயங்கும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை எளிதில் இதன் மூலம் இயக்க முடிகிறது.

விண்டோஸ் 7 விஸ்டா போலவே பல வழிகளில் இருந்தாலும் மேலே தரப்பட்டுள்ள பல புதிய வசதிகள், கூடுதல் பாதுகாப்பு, நிலையாக இயங்கும் தன்மை ஆகியவற்றிற்காக நிச்சயம் இதற்கு நம் கம்ப்யூட்டரை மேம்படுத்திக் கொள்ளலாம். விண்டோஸ் 7 தரும் சில புதிய டூல்களை இங்கு காணலாம்.

ப்ராப்ளம் ஸ்டெப்ஸ் ரெகார்டர் (Problem Steps Recorder (PSR)

விண்டோஸ் 7 சிஸ்டத் தினைக் காப்பாற்றும் ஒரு வசதி. உங்கள் கம்ப்யூட்டர் ஏதேனும் ஒரு பிரச்னையால் பாதிக்கப் படுவதாகத் தெரிந்தால், அந்த பிரச்னை உருவாகும் விதத்தினை இந்த வசதி பதிவு செய்திடும். இதன் மூலம் அந்த பதிவினை, பிரச்னையைத் தீர்க்கக் கூடிய நபருக்கு அனுப்பி, வழிமுறைகளைக் கேட்கலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது

Problem Steps Recorder (PSR) என்பதனைத் திறந்து "Record" என்ற பட்டனை அழுத்த வேண்டியதுதான். இதனை அழுத்தியபின் ஒவ்வொரு மவுஸ் கிளிக் செய்திடும்போதும் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்படும். இவற்றுடன் நம்முடைய குறிப்புகளையும் இணைக்கலாம். இந்த ஸ்கிரீன் ஷாட்கள் அனைத்தும் அடங்கிய எச்.டி.எம்.எல். பைல் ஒன்று உருவாக்கப்படும். அது ஸிப் செய்யப்பட்டு டெஸ்க்டாப்பில் வைக்கப்படும். பின் அது தானாக பிரச்னையின் அடிப்படையில் வல்லுநர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த PSR பைலை psr.exe என்று டாஸ் கமாண்ட் புள்ளியில் கொடுத்தும் இயக்கலாம்.

கிரெடென்ஷியல் மேனேஜர்

இது விண்டோஸ் 7 இயக்கத்தில் தரப்பட்டுள்ள ஒரு புதிய வசதி. விஸ்டாவில் யூசர் அக்கவுண்ட்டில் தரப்பட்ட பாஸ்வேர்ட் மேனேஜர் போன்ற வசதியை விரிவாகத் தருகிறது. இந்த டூல் மூலம் நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் நுழைந்தாலும் அந்த செயல்பாட்டிற்கான கிரெடென்ஷியல் உருவாக்கப்பட்டு ஒரு போல்டரில் தக்கவைக்கப்படுகிறது.

இதே போல இமெயில் அக்கவுண்ட் மற்றும் வெப் அக்கவுண்ட் ஆகியவற்றிற்கும் உருவாக்கலாம். இவற்றை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்துக் கொண்டால், சிஸ்டம் கிராஷ் ஏற்படுகையில் இவற்றை மீண்டும் புதுப்பித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disc)

உங்களுடைய சிஸ்டம் கரப்ட் ஆகி, கம்ப்யூட்டர் பூட் ஆக மறுக்கையில் உங்களுக்கு வாழ்வு தரும் டிஸ்க்கினை உருவாக்கும் அருமையான வசதி இது. இந்த வசதியைப் பயன்படுத்தி சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றை உருவாக்கலாம். அதன் மூலம் கிராஷ் ஆன கம்ப்யூட்டரை இயக்க முடியும். இதனை உருவாக்கஸ்டார்ட் அழுத்தி சர்ச் பாக்ஸில் சிஸ்டம் ரிப்பேர் (System Repair) என டைப் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் ‘Create A System Repair Disc’ என்பதில் அழுத்தவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உங்கள் சிஸ்டத்தில் உள்ள சிடி பர்னர் திறக்கப்படும். இதில் கிரியேட் டிஸ்க் (Create Disk) என்பதில் கிளிக் செய்திடவும். இனி உருவாக்கப்படும் டிஸ்க்கை எடுத்துப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

சிஸ்டம் கிராஷ் ஆனால் இந்த டிஸ்க்கை எடுத்து, அதன் டிரைவில் போட்டு இயக்கவும். இயங்கத் தொடங்கியவுடன் ரெகவரி ஆப்ஷன்ஸ் ஒரு பட்டியல் கிடைக்கும். இதில் Startup repair, System restore, System image recovery, Windows memory diagnostic and Command prompt எனப் பல ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்களுக்கு எது தேவையோ அதனைக் கிளிக் செய்து, சிஸ்டத்தினை சரி செய்து கொள்ளலாம்.

பேக் அப் டூல் (Backup utility)

விஸ்டாவில் ஒரு பேக் அப் டூல் கிடைத்தது. அது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நிறைய ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்களின் பேக் அப் காப்பியை அதே ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு பகுதி, செருகி எடுத்துச் செல்லக்கூடிய ஹார்ட் டிஸ்க், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவ் ஆகிய ஒன்றில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பேக் அப் செய்திடுகையில், பேக் அப் தேவையற்ற போல்டர்கள் மற்றும் டிரைவ்களை விலக்கியும் எடுக்கலாம்.

திரைத் தோற்றத்தை அமைத்தல் (Text tuning and color calibration)

விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் நல்ல டூல்களில் இதுவும் ஒன்று. நம்மில் பலர் சிஸ்டம் மானிட்டரில் என்ன காட்சி கிடைக்கிறதோ, அதனை அப்படியே வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை இயக்குகிறோம். நம் கண்களுக்கு இந்த தோற்றம் சரியாக உள்ளதா, எரிச்சலைத் தருகிறதா, வண்ணக் கலவை சரியாக உள்ளதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. கிடைக்கின்ற இமேஜை ஒன்றும் செய்திட முடியாது என்ற எண்ணத்துடன் செயலாற்றுகிறோம். விண்டோஸ் 7 இந்த இமேஜை எடிட் செய்திடும் டூல் ஒன்றை நமக்குத் தருகிறது. இந்தடூல் பெயர் ClearType Text Tuner. இதனை கண்ட்ரோல் பேனல் சென்று இயக்கலாம். இந்த டூல் மூலம், மானிட்டரில் தெரியும் காட்சியினை ட்யூன் செய்திடலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்கள் இணைக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு மானிட்டரின் இமேஜையும் ட்யூன் செய்து வைத்திடலாம்.இவ்வாறு எடிட் செய்திடுகையில் வண்ணக் கலவையினை சரி செய்திட விண்டோஸ் 7 Display Color Calibration என்ற டூலைத் தருகிறது. கலர் இணைப்பு, பிரைட்னெஸ், காண்ட்ராஸ்ட் ஆகிய வசதிகள் இந்த டூல் மூலம் பெற்று வண்ணக் கலவையை நம் கண்கள் விரும்பும் வகையில் சரி செய்திடலாம்.

மேத் இன்புட் பேனல் (Math Input Panel)

விண்டோஸ் 7 தொகுப்பை உங்கள் டேப்ளட் பிசி அல்லது டச் ஸ்கிரீன் கொண்ட மானிட்டருடன் இயக்குகிறீர்களா? அப்படியானால் சில மேத்ஸ் கால்குலேஷனை மேற்கொள்கையில் அதற்கான சிறப்பு கீகளைத் தேடிப் பயன்படுத்த வேண்டியதில்லை. திரையில் மேத்ஸ் சிம்பல் மற்றும் பார்முலாக்களை அமைத்தால், இந்த மேத் இன்புட் டூல் தானாக அதனை அறிந்து கொண்டு டெக்ஸ்ட்டாக மாற்றி, கணக்கினை செயல்படுத்துகிறது.

சாதாரண வழக்கமான திரை கொண்டு இயக்கிக் கொண்டிருந்தால், திரையில் மவுஸ் மூலம் இந்த பார்முலாக்களை எழுதியும் இந்த டூல் மூலம் முயற்சிக்கலாம்.

பிரைவேட் கேரக்டர் எடிட்டர் (Private Character Editor)

ஒரு சிலரின் கையெழுத்து அழகாக இருக்கும். அச்சிடுவதற்குப் பதிலாக இதனையே வைத்துக் கொள்ளலாமே என்று விரும்புவார்கள். கம்ப்யூட்டரில் ஒரு சில எழுத்துக்களில் நீங்கள் சிறிய மாற்றங்களை விரும்புவீர்கள். அல்லது எழுத்து வகைகளை நீங்களே மாற்றி அமைக்க ஆசைப்படலாம். அப்படிப்பட்ட விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த கேரக்டர் எடிட்டர் டூல் உதவுகிறது. கேரக்டர்களை எடிட் செய்து, பின் கேரக்டர் மேப் மூலம் இவற்றை இன்புட் செய்து டாகுமென்ட்களிலும் பிற பைல்களிலும் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் எக்ஸ்.பி - விண்டோஸ் 7 : சில வேறுபாடுகள்

நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்திருந்தாலும், புதிய கம்ப்யூட்டர் ஒன்றை விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வாங்கி இருந்தாலும், பெரும்பாலானவர்கள், விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்துதான் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சந்திக்க நேரும் சில அடிப்படை வேறுபாடுகளை இங்கு காணலாம்.

1. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை குயிக் லாஞ்ச் பாரில் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அதிலிருந்து கிளிக் செய்து, புரோகிராமினை இயக்கிச் செயல்படுவார்கள். இதற்காகவே சிலர் கீழாக உள்ள டாஸ்க் பாரில் அதிக ஐகான்கள் வைப்பதற்காக, அதனை டபுள் டெக்கர் பஸ் போல பெரிதாக வைத்திருப்பார்கள். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் குயிக் லாஞ்ச் பார் இல்லை. அதற்குப் பதிலாக பின்னிங் (Pinning) என்னும் வசதி தரப்பட்டுள்ளது. எந்த அப்ளிகேஷனிலும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Pin என்னும் பிரிவை டாஸ்க் பார் அல்லது ஸ்டார்ட் மெனு அல்லது இரண்டிலும் இருக்குபடி செட் செய்திடலாம். மேலும் டாஸ்க்பாரில் உள்ள ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் இயங்கிக் கொண்டிருந்தால், அதன் ஐகானைச் சுற்றிச் சிறிய வட்டம் காட்டப்படுவதும் ஒரு புதுமையான வேறுபாடு.

2. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் என்னும் பிரிவை அடிக்கடி பயன்படுத்தி, அப்போதைக்குப் பயன்படுத்திய புரோகிராம்களைப் பெற்று இயக்கியிருப்பார்கள். இந்த மெனு ஸ்டார்ட் மெனுவிற்கு வலது பக்கம் கிடைக்கப் பெறும். இதில் அப்போது பயன்படுத்திய பைல், அது டாக், ஜேபெக், எம்பி3 என எதுவாக இருந்தாலும், பட்டியலிடப்படும். அதில் கிளிக் செய்து பெறலாம். இதனை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இன்னும் விரிவாக்கியுள்ளது மைக்ரோசாப்ட். ஒவ்வொரு அப்ளிகேஷனும் ஒரு மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் பட்டியலை ஜம்ப் லிஸ்ட் (Jump List) என்ற பெயரில் கொண்டுள்ளது. ஸ்டார்ட் மெனுவில் உள்ள புரோகிராம் அருகே ஒரு அம்புக் குறி உள்ளது. இதன் அருகே மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கிய தற்போதைய பைல்களின் பட்டியல் கிடைக்கிறது.

மேலும் இந்த ஜம்ப் லிஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து, குறிப்பிட்ட பைலை பின் செய்து கொள்ளலாம். இதனால் அந்த குறிப்பிட்ட பைல் இந்த பட்டியலின் சுழற்சியில் மறையாது.

3. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் பைல் மற்றும் போல்டர் களுக்குப் பழகிவிட்டனர். விண்டோஸ் வெளியாகும்போது, மைக்ரோசாப்ட் இதனைப் பயன்படுத்துபவர்கள், மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தங்கள் பைல்களையும், மை பிக்சர்ஸ் போல்டரில் பட பைல்களையும் மியூசிக் பைல்களை மை மியூசிக் போல்டரிலும் மட்டுமே வைப்பார்கள் என எதிர்பார்த்தது. ஒருவகையில் பார்த்தால் அது தர்க்க ரீதியாக சரி என்றே தெரிகிறது. அதன்படி பைல்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தால், பேக் அப் எடுக்கவும் பைல்கள் எங்கு இருக்கின்றன என்று தேடிப் பார்க்கவும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் எல்லாம் நாம் திட்டமிட்டபடியாகவா நடக்கிறது! நாம் இஷ்டப்படி மை டாகுமென்ட்ஸ் போல்டருக்கு வெளியே போல்டர்களை உருவாக்கி, நம் இஷ்டத்திற்கும் வசதிக்கும் ஏற்றபடி பைல்களைப் பாதுகாப்பாக(!) வைக்கப் பழகிவிட்டோம். இதனால் டேட்டா அடங்கிய பைல்கள் டிரைவ்கள் எங்கும் சிதறிக் கிடக்க, பிரச்னைகளும் குவிந்தன.

இந்த பிரச்னைக்கு தீர்வாக விண்டோஸ் 7 லைப்ரரி என்ற ஒரு வழியைத் தந்துள்ளது. பைல்கள் சிதறிக் கிடந்தாலும், அவற்றை இந்த ஓர் இடத்தில் வைத்துத் தேடிப்பார்த்துப் பெறும் வகையில் லைப்ரேரி அமைக்கப்படுகிறது.

மேலும் இந்த லைப்ரரியில் பைல்கள் அமைக்கப்படுகையில், பைல்களின் தன்மைக்கேற்ப பைல்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பட பைல்கள் தம்ப்நெயில் படங்களுடன் காட்சி அளிக்கும்.

மேலே சொல்லப்பட்ட மூன்று வேறுபாடுகளும் சில அடிப்படை வேறுபாடுகளே. இன்னும் பல வேறுபாடு களை நீங்கள் பயன்படுத்துகையில் அறிந்து கொள்ளலாம். இன் புதிய வசதிகள்

Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி



இந்த முயற்சியின் மூலம் கிடைத்த விடை, நாம் அந்த பரீட்சாத்த மென்பொருளை (Trial), எவளவு நாட்கள் வேண்டுமெண்றாலும்
பாவிக்கலாம்

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது 29 நாட்களுக்கு ஒருமுறை தல 1 நிமிடம் வரை செலவு செய்ய வேண்டும்.

செய்முறை :

*kaspersky இன் எந்த மென்பொருளயும் நீங்கள் வைத்திருக்கலாம், (Kaspersky IS, Kaspersky AV)

1. நீங்கள் பழய அனுமதி வைத்திருந்தால் (KEY FILE) அதை அழித்துவிடுங்கள்
2. Kaspersky ஐ open செய்து Enable Self-Defense ஐ Un-tick செய்யவும்.

Enable Self-Defense ஐ Un-tick செய்யும் முறை

1. Open the kaspersky
2. Go to “Settings” on the right hant top corner
3. you will prompt a box
4. in the box click the “option Button”
5. u can see in the right hand side ” Enable Self-Defens”
6. un-tick that

3. பின்னர் kaspersky ஐ exit செய்யவும்

Kaspersky Trial Resetter v1.8.0.0 Final REZMAN1984
4. kaspersky Trial Resetter v1.8.0 ஐ தள இறக்கம் செய்து உங்கள் கணனியின் முகதிரையில் வைத்துக்கொள்ளவும் (SAVE ON DESKTOP)
5. extract the file (password : kaspersky)
6. in the folder u can find kaspersky resetter.exe
7. run it
8. press “start”

9. ஒரு 30 நொடி (sec) பொறுங்கள்….. உங்களது Kaspersky மறுபடியும் செயற்பட்டு உங்களிடம் Activate செய்ய கேட்கும்…
அப்பொளுது “Activate Trial vertion” என்பதை அளுத்துங்கள்….

உங்களது மென்பொருள் 30 நாட்கள் பாவனக்கு தயாராகுவிடும்…

முக்கிய குறிப்பு :
1. trial resetter ஐ வேலை முடிந்தவுடன் அழித்துவிடவும் (delete the restetter but don’t delete the .rar file)
2. உங்களது Kaspersky trail இல் இயங்குகிறது எண்று சொல்லும்.. அதை நீங்கள் “Hide Message” இல் மறைத்து விடலாம்

29 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து கொள்ளவும்…. (29 நாள் தான் என்று கட்டாயம் இல்லை, நீங்கள் விரும்பும் நேரத்திலும்
செய்து கொள்ளலாம்)

இது Windows XP, Windos 7 Home Premium, என்பவற்றில் பரீட்சித்து பார்க்கப்பட்டது.

சனி, பிப்ரவரி 18, 2012


கணனியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள்.


உங்கள் கணனியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள் உள்ளது.
இணையவசதி மட்டும் இதற்கு போதுமானது. இதில் நீங்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம்
இதில் நீங்கள் தமிழ் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும்.
இதில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணனியில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
இதனை தரவிறக்கம் செய்ய.http://www.4shared.com/file/ofbe708i/TVUPlayer2531_ByAlimbjbr.html

பழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்.

இரண்டாம்(Secondary) நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி(cd/dvd) என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை? பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.
பழுதான சிடியிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுக்கும் இலவச மென்பொருள் தான் Get My videos Back . இந்த மென்பொருள் சிறப்பான முறையில் பெரும்பாலான தகவல்களை மீட்டுத்தருகிறது. (Recovering data) இதன் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை பழுதானவற்றிலிருந்து கணிணிக்கு சேமித்துக் கொள்ளலாம்.
Source என்பதில் பழுதான சிடியுள்ள இடத்தையும் Target என்பதில் எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் தேர்வு செய்து Open start என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். தகவல்களை மீட்டெடுக்கும் போது அதன் காப்பி செய்யும் செயல்பாட்டை நமக்கு காட்டுகிறது.
இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற சுதந்திர மென்பொருளாகும் (Open source). Avi, mkv, mp3 போன்ற முக்கிய வீடியோ வகைகளை இந்த மென்பொருள் ஆதரிக்கின்றது.
மென்பொருளினை பதிவிறக்க :http://www.mediafire.com/?9riogb46n36zy84

உங்கள் கணனியினை உங்கள் குரல் மூலம் செயற்பட வைக்க வேண்டுமா?

Voice and Speech Recognition இவ் மென்பொருளை  கொண்டு நாம் எமது கணனியை எமது குரல் கட்டளைகளுக்கு செயற்பட வைக்கலாம். பைல்கள் மற்றும் புரோகிராம்களை எமது குரல் கடட்டளைகளைக்  கொண்டே திறந்து மூடலாம். மென்பொருளை இன்ரோல் செய்து முயற்சி செய்துதான் பாருங்களன்.

Youtube காணொளிகளை தரவிறக்கம் செய்ய மிக இலகுவான வழி.


கூகுளின் யூடியூப் என்பது மிகப்பிரபலம் பெற்ற இணையத்தளமாகும். இதில் பல இலட்சக்கணக்கான காணொளிகள் தரவேற்றப்பட்டுள்ளன. இவற்றை நாம் இலவசமாக கண்டுகளிக்கமுடியும்.
இதில் இல்லாத காணொளிகள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பழையவை முதல் புதியவை வரை அனைத்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை எமக்கு தரவிறக்கம் செய்து கொள்ள ஆர்வமிருக்கும். இவற்றிற்காக நாம் சில மென்பொருட்களை உபயோகப்படுத்துவது வழக்கம்.
அவ்வாறு நாம் தரவிறக்கும் காணொளிகள் FLV என்ற வடிவத்திலேயே கிடைக்கும். இவற்றை பின்னர் நாம் நமக்கு தேவையான வடிவத்திற்கு மாற்றிக் கொள்வது வழக்கம்.
ஆனால் வேறு எந்த மென்பொருட்களின் துணையுமின்றி மிக இலகுவாக Mp3, Mp4, FLV வடிவத்தில் யூடியுப் வீடியோவின் கீழ் தோன்றும் பட்டனின் உதவியுடனேயே தரவிறக்கம் செய்யமுடியும்.
கீழுள்ள இணைப்புகளின் ஊடாக அதனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
பயர்பொக்ஸ் பாவனையாளர்கள்

https://addons.mozilla.org/en-us/firefox/addon/easy-youtube-video-downl-10137/
குரோம் பாவனையாளர்கள்

உங்கள் கணனியின் முகவரியினை யாரும் கண்டுபிடிக்காமல் மறைக்க வேண்டுமா?

வீட்டுக்கு ஒர் விலாசம் போல கணனிகளுக்கும் முகவரியுண்டு அதுவே IP Addresa ஆகும். நீங்கள் எந்தவொரு இணையத்தளத்தினை பார்வையிட சென்றாலும் உங்களது முகவரி சேமிக்கப்படும். IP முகவரியினைக் கொண்டு உங்கள் கணனியின் விபரங்கள் தொட்டு உங்கள் விபரங்கள் வரை அனைத்தையும் கண்டிறிய வாய்ப்புண்டு. மற்றும் IP முகவரியினைக் கொண்டு Hackers கைவுரிசையைக் காட்டக் கூடும். எனவே பாதுகாப்பான இணைய பாவனைக்கு எமது ip முகவுரியினை மறைத்து வைத்திருப்பது. ஓர் சிறந்த முறையாகும்சூ.
ip முகவுரியினை மறைப்பதற்கான மென்பொருள் பதிவிறக்க தரப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கி பின்வரும் படிமுறைகளினை பின்பற்றவும்.(குறிப்பு: இவ் மென்பொரளிளை சில Anti Virusகள் தடைசெய்யும்)
  • Auto Hide IP v5.1.2.6 மென்பொரளினை இன்ரோல் செய்யுங்கள்.
  • இன்ரோல் முடிந்தபின் அதனை ரன் செய்ய வேண்டாம்.
  • பின்னர் கிரக் “AutoHideIP.exe” என்பதைனை கொப்பி செய்து. “C:\Program Files\AutoHideIP\”  இங்கு சென்று AutoHideIP.exe என்பதனை Overwrite செய்யுங்கள்.
  • அவ்வளவுதான்.
பாதுகாப்பான இணைய பாவனைக்கு எமது வாழ்த்துக்கங்ள்.
AutoHideIP மென்பொரளினை பதிவிறக்கிக் கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்.


சனி, பிப்ரவரி 04, 2012

பெயர்: உலகம்
தோற்றம்: 00 -00 -0000
மறைவு: 21 -12 -2012
மரணம்: இயற்கை ! ! !
இவண்: மாயன்கள்.
உலகம் அழியப்போகிறது என பலமுறை கூறப்பட்டபோதும், 2012 ல் இது பற்றி அதிகமாக விவாதிக்கப்படுகிறதே! ஒருவேளை உண்மையிலேயே 2012 ல் உலகம் அழியப்போகிறதா? எப்படி அழியப்போகிறது? ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? யார் இந்த மாயன்கள்…..மாயன்கள்
கி.மு. 2600 ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவில் வசித்தசெவ்விந்தியர்கள் தான் மாயன்கள் என அறியப்படுகிறது. கட்டிடக்கலை, வானியல் சாஸ்திரம், கணித அறிவு, கலாசாரம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர்களாக மாயன்கள் இருந்துள்ளனர். சூரிய, சந்திர இயக்கங்களை பதிவு செய்ய மாயன் மக்கள் வான் ஆய்வுக் கூடங்களை ஏற்ப்படுத்தி இருந்தார்கள். நவீன அறிவியலில் 1945 ம் ஆண்டுக்கு பிறகு அறியப்பட்ட பால் வெளி மண்டலம்(milky way) பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர்.
18 மாத காலண்டர்!
மாயன்கள் உருவாக்கிய காலண்டர்களில் இரண்டு வகை காலண்டர்கள் முக்கியமானவை. ஒன்று 365 நாட்களை கொண்டது . ஆண்டுக்கு 18 மாதங்கள். மாதத்திற்கு 20 நாட்கள். இந்த காலண்டரை ஹாப் (haab) காலண்டர் என்று அழைத்தார்கள். இதன் படி வருடத்திற்கு 360 நாட்கள் வரும். எஞ்சிய ஐந்து நாட்கள் அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்று நம்பினார்கள். இந்த காலண்டர்கள் சாமானியர்களின் உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டது. கி.மு. 550 ல் இந்த காலண்டர்கள் நடைமுறைக்கு வந்திருக்கலாம் என அறியப்படுகிறது.
அடுத்த வகை காலண்டர் வருடம் 260 நாட்கள் கொண்டது. ஒவ்வோர் ஆண்டுக்கும் 13 மாதங்கள். மாதத்திற்கு 20 நாட்கள். இந்த வகை காலண்டர் இஸல்கின்(isalkin) என அழைக்கப்பட்டது.
மாயன்கள் Vs 2012
2012 ல் உலகம் அழியப்போகிறது என்ற சர்ச்சைக்கு காரணம் இவர்களின் காலண்டர் தான். அதாவது மாயன்கள் உருவாக்கிய காலண்டர் டிசம்பர் 21 – 2012 தேதியுடன் முடிவடைகிறது. இதன் அடிப்படையில் உருவான எண்ணம் தான், இந்த தேதியில் உலகம் அழிந்துவிடும் என்பது. வானவியல் சாஸ்திரத்தில் சிறந்து விளங்கியதாலும், நுணுக்கமான காலண்டரை உருவாக்கியவர்கள் என்பதாலும் இந்த விஷயம் விவாதப்பொருளாக விளங்குகிறது.
தொடர்பான கட்டுரைகள்:
நோக்கு வர்மம்
உலக அழிவு பற்றி அறிவியல் தரும் விளக்கம்
மாயன் காலண்டர் கி.மு. ஆகஸ்ட் 11 – 3114 ல் தொடங்கி கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே முடிந்துவிடுகிறது என்ற மாறுபட்ட கருத்தும் உண்டு. மேலும் மாயன்களின் எழுத்துகளை படித்து உணர முடியாததால் பலதரப்பினரிடையே பல்வேறு வித கருத்தும் நிலவுகிறது.
உலகம் அழியப்போகிறது என்றவுடன் இரண்டு கேள்விகள் தோன்றுகிறது. அதாவது பூமியின் அழிவு பூமியிலேயே ஏற்படுமா? அல்லது பூமிக்கு அப்பால் உள்ள சக்தியினால் உலகம் அழியுமா?.
உலகம் மூன்று விதங்களில் அழியலாம்.
1 . கடலில் ஆழிப்பேரலை எனப்படும் சுனாமியால் நிகழலாம்.
2 . பூமிக்கடியில் கனன்று கொண்டிருக்கும் எரிமலைகளால் நிகழலாம்.
3 . விண்வெளியிலிருந்து எரிகற்கள் பூமியை தாக்குவதன் மூலம் நிகழலாம்.
எரிமலை
பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது தான் பூமி. இந்த பூமி இருக்குமிடம் என்பது காட்சிக்கெட்டாத அதிசயமாகும். பேரண்டத்தில் பல்லாயிரக்கணக்கான அண்டங்கள் உள்ளன. அந்த அண்டங்களில் ஒன்றில் தான் சூரியன், பூமி போன்ற சிறியதும் பெரியதுமான விண்மீன்கள் இருக்கின்றன.
700 கோடி மனிதர்களையும், பலகோடி ஜீவராசிகளையும் கொண்ட பூமி முழுவதையும் எரிமலைகளால் பொசுக்கிவிட முடியாது.
எரிகல்
ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட விண்கற்களால் தான் பூமிக்குபாதிப்பு ஏற்படும். பூமியை தாக்கக்கூடிய, பூமிக்கு அருகில் உள்ள எரிகற்களை குறைந்தது பத்து வருடங்களுக்கு முன்கூட்டியே அறியக்கூடிய அளவில் அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது. எனவே எரிகற்கலால் இப்போதைக்கு பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கடல்
இந்த உலகையே மூழ்கடிக்கும் சக்தி கடலுக்கு நிச்சயம் உண்டு. ஏனெனில் இந்த பூமி 70 % கடலால் சூழப்பட்டுள்ளது. கடற்கரையில் நின்று கொண்டு இந்த கடல் நீரெல்லாம் நிலப்பரப்பை நோக்கி வரப்போகிறது என்று கற்பனை செய்து பார்த்தால்………..
இது சாத்தியப்பட்ட விசயமாகவே தற்போதைய நிலைமை உள்ளது. பனிமலைகள் உருகிக்கொண்டே வருகின்றன. இதனால் கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டேவருகிறது. பருவம் தவறி மழையும், புயலும் வீசுகின்றது. புவி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் விளைவுகளால் டிசம்பர் 21 – 2012 எனும் ஒரே நாளில் உலகம் முழுவதும் சுனாமி ஏற்ப்பட்டு அழியப்போவதில்லை. ஆனால் அழிவிற்கான அறிகுறிகள் தொடங்கியுள்ளன. மனிதன் தன் வாழ்க்கை தரத்தை உயர்திக்கொள்வதற்கு செய்யும் காரியங்கள், மனித குலத்தையே தொலைத்து கொள்வதற்கு காரணமாக உள்ளது.
இந்த உலகில் பலகோடி ஜீவராசிகள் இருந்தாலும் மனிதன் மட்டுமே பூமிக்கு எதிரியாக இருக்கிறான். மனிதன் இல்லாத பூமிக்கு ஆயுசு கெட்டி. இனி மனிதன் தன் சந்ததிக்கு சொத்து சேர்க்க செவ்வாயிலும், வியாழனிலும் தான் நிலத்தை வாங்க வேண்டும்.
எது எப்படியோ, உலகின் மரணம் இயற்கையானதாக இருக்காது, அது மனிதன் செய்யும் கொலையாகத்தான் இருக்கும் என்பது சர்வ நிச்சயம்.
போதி தர்மர்
தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் இந்த ‘போதி தர்மர்‘. இவரது தந்தை பெயர் ‘காந்தவர்மன்‘. பல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம் சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான், பல்லவர்களின் ஆட்சி காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது. அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மன், மகாயான புத்த மதத்தை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இவரே சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீனாவில் அறிமுகப்படுத்தியதாக சான்றுகள் கூறுகின்றன.
தொடர்பான கட்டுரைகள்:
நோக்கு வர்மம்
கரிகாலன்-தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மன்னன்
ஏழாம் அறிவு
யோகாசனம் (பகுதி 1) – புஜங்காசனம்
யோகாசனம் (பகுதி 2) – சலபாசனம்
கி.பி. 495 ஆம் ஆண்டு BA TUO (BUDDHABHADRA) என்ற இந்திய துறவி XIAO SHENG என்ற புத்த மதத்தை பரப்புவதற்காக சீனா சென்றார். அவரை SHAO WEN என்ற சீன அரசன் வரவேற்று SHAOSHI என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள நிலத்தை அவருக்கு கொடுத்தார்.
BA TUO அந்த நிலத்தில் SHAOLIN கோவிலை நிறுவினார்.
அந்த காலகட்டத்தில் போதிதர்மர் (BODHI DHARMA) என்ற ஒரு இந்திய அரச குடும்பத்தை சேர்ந்தவர் வாழ்ந்து இருக்கிறார். காந்தவர்மன் என்ற பல்லவ மன்னனின் மூன்றாவது மகன் தான் இந்த போதி தர்மர். காந்தவர்மன் தன மகன்களிலேயே போதி தர்மர் மீது தான் அதிக பாசத்துடன் இருந்தார். இதனால் பொறாமை கொண்ட மற்ற இரு சகோதரர்களும் போதி தருமரை கொலை செய்ய முயன்றனர். ஆனால் போதி தர்மர் அந்த முயற்சியிலிருந்து தப்பித்தார். மேலும் போதி தர்மர் அரசியல் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருந்தார். அவர் ஒரு புத்த துறவியின் போதனைகளை பெற்று புத்த துறவியாக மாறினார்.
போதி தருமரின் குரு, அவருடைய அந்திம காலத்திற்கு பிறகு போதி தர்மர் சீனா செல்ல வேண்டுமென கட்டளை இட்டார். அந்த காலத்தில் சீனா ZHEN DAN என அழைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் குரு இறந்துவிடவே,போதி தர்மன் சீனா செல்ல தயாரானார். இந்த காலகட்டத்தில் போதி தருமரின் மூத்த சகோதரரும் அதன் பிறகு அவர் மகனும் மன்னராக ஆகி இருந்தனர். மன்னனான போதி தருமரின் மூத்த சகோதரனின் மகன், தன்னுடைய சித்தப்பாவான போதி தர்மர் மீது அதிக பாசம் கொண்டிருந்தான். தன்னுடைய தந்தையும்,அவருடைய சகோதரரும் போதி தருமருக்கு செய்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தமாக, போதி தருமரை தன அருகிலேயே வைத்திருக்க ஆசைப்பட்டார். ஆனால் போதி தர்மர் தன குருவின் கட்டளைப்படி சீனா செல்வதை அறிந்துகொண்டார். எனவே அவர் சீன மக்களிடம் போதி தருமரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தூது அனுப்பினார். இது சீன மக்களிடம் ஆச்சரியத்தை புகழையும் உண்டுபண்ணியது.கி.பி. 527 ம் ஆண்டு, BA TUO துறவி SHAOLIN கோவிலை நிறுவி 32 ஆண்டுகள் கடந்த பின்னர் போதி தர்மர் சீனாவின் Guangdong வந்தடைந்தார். அங்கு அவர் DA MAO என்று அழைக்கப்பட்டார். DA SHENG என்ற மஹாயான புத்த மதத்தை பரப்புவதற்கு DA MAO சீனா வந்துள்ளார் என்பதை அறிந்த மக்கள்,அவருடைய சொற்பொழிவை கேட்க ஆசைப்பட்டனர். ஆனால் DA MAO என்ற போதி தர்மர் பலமணி நேரம் தியானத்தில் இருந்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றுவிடுவார். ஆனால் அவருடைய செயல்கள் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வை மட்டும் ஏற்ப்படுத்தி இருந்தது.
சீனர்களிடம் போதி தருமருடைய ஓவியங்களை காணலாம். கரிய அடர்த்தியான புருவம், பெரிய பருத்த மூக்கு, தாடி மீசை, குண்டு விழிகள் ஆகியவற்றுடன்அவரை வரைந்திருப்பார்கள்.
போதி தர்மரைப் பற்றி வேறு சில வரலாறுகளும் இருக்கின்றன.
அவர் சீனாவில் தொடர்ச்சியாக ஒன்பதாண்டுகள் தியானத்தில் இருந்தாராம். ஒரு சுவற்றை நோக்கி அமர்ந்துகொண்டு அதனையே பார்த்தவண்ணம் இருந்தாராம். ஆரம்பத்தில் தூக்கம் வந்ததாம். ஆகவே தம்முடைய கண்களின் மேல் இமைகளை எடுத்து தூக்கி எறிந்துவிட்டாராம். அந்தவண்ணம் அவர் கண்களை மூடாமல் தூங்காமல் இருந்தாராம்.
அந்த இமைகள் விழுந்த இடத்தில் ஒரு செடி முளைத்ததாம். அந்தச் செடியின் இலைகள் காய்ந்து உலர்ந்து சருகுகளாக அங்கே கிடந்தனவாம்.
ஒரு புத்த பிட்சு ஒருமுறை திறந்த வெளியில் அந்தச்செடி இருந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தாராம். அவர் எப்போதுமே வெந்நீர்தான் குடிப்பவர். அந்த வெந்நீர்ப் பாத்திரத்துக்குள் அந்தச் செடியின் சருகுகள் காற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு விழுந்துவிட்டனவாம். நீரை வீணாக்க விரும்பாத புத்தபிட்சு, அந்தச் சருகுகளை எடுத்தெறிந்துவிட்டு, அந்த வெந்நீரைப் பருகினாராம்.
அதனைப் பருகியதும் உடல் சுறுசுறுப்பாகவும் மனது தெளிவாகவும் இருந்ததாம். அதுவரைக்கும் அழுத்திக்கொண்டிருந்த சோம்பல் தூக்கம் ஆகியவை சென்ற இடம் தெரியாமல் ஓடி மறைந்துவிட்டனவாம்.
அந்தச்செடியை ஆராய்ந்து பர்த்துவிட்டு, அதன் இலைகளைப் பானமாக்கி குடிக்கும் வழக்கத்தைத் தாமும் மேற்கொண்டு விட்டு சீனாவிலும் அந்த பிச்சு பரப்பிவிட்டாராம். அப்படித் தோன்றியதுதான் தேயிலையாம்.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிட்சுகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும்.
உடற்பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்தார்.
அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக்கொடுத்தார். தங்களது கோயில்களைச்
சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.
உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளயும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில்காயம் ஏற்படாமுறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.

இளைய தளபதி விஜய்


     த
மிழகத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, தனது துள்ளலான நடிப்பால் கவர்ந்து வைத்துள்ளார் இளைய தளபதி விஜய்.
விஜய் குடும்பம்
பிரபல இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர் தம்பதிகளுக்கு 22 ஜூன் 1974 ம் ஆண்டு பிறந்தார் ஜோசப் விஜய். விஜய்க்கு ஒன்பது வயது இருக்கும் போது, அவருடைய இளைய சகோதரி வித்யா காலமானார். சென்னை லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் முடித்த விஜய், தன் தந்தையின் இயக்கத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 1999 ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ம் தேதி இலங்கை வம்சாவளியான சங்கீதாவை மணந்தார் விஜய். விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.
விஜயின் சினிமா வாழ்க்கை
1992 ம் ஆண்டு “நாளைய தீர்ப்பு” படத்தின் மூலம் அறிமுகமானார் விஜய். 1996 ல் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு “காதலுக்கு மரியாதை”, “துள்ளாத மனமும் துள்ளும்”, “குஷி”, “ஃபிரண்ட்ஸ்” ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியடைய, தரணி இயக்கத்தில் வெளிவந்த கில்லி, விஜயின் நட்சத்திர அந்தஸ்தை கணிசமாக உயர்த்தியது.
விஜய் நடித்த படங்கள்
படத்தின் பெயர்                                                         இயக்குனர்
1.DEC 1992          நாளைய தீர்ப்பு                                             எஸ்.எ.சந்திரசேகர்
2.DEC 1993        செந்தூரபாண்டி                                              எஸ்.எ.சந்திரசேகர்
3.JAN 1994       ரசிகன்                                                                   எஸ்.எ.சந்திரசேகர்
4.FEB 1994        தேவா                                                                   எஸ்.எ.சந்திரசேகர்
5.AUG 1995      ராஜாவின் பார்வையிலே                       ஜானகி சௌந்தர்
6.SEP 1995       விஷ்ணு                                                               எஸ்.எ.சந்திரசேகர்
7.SEP 1995      சந்திரலேகா                                                         நம்பிராஜன்
8.JAN 1996    கோயம்புத்தூர் மாப்பிள்ளை                   சி.ரங்கநாதன்
9.FEB 1996     பூவே உனக்காக                                               விக்ரமன்
10.JUN 1996 வசந்த வாசல்                                                   எம்.ஆர்
11.JUL 1996  மாண்புமிகு மாணவன்                                 எஸ்.எ.சந்திரசேகர்
12.DEC 1996  செல்வா                                                                  ஏ.வெங்கடேசன்
13.JAN 1997 காலமெல்லாம் காத்திருப்பேன்             ஆர்.சுந்தர்ராஜன்
14.MAY 1997 லவ் டுடே                                                            பாலசேகரன்
15.JUNE 1997 ஒன்ஸ்மோர்                                                     எஸ்.எ.சந்திரசேகர்
16.SEP 1997    நேருக்கு நேர்                                                     வசந்த்
17.DEC 1997  காதலுக்கு மரியாதை                                   பாசில்
18.APR 1998 நினைத்தேன் வந்தாய்                                கே.செல்வபாரதி
19.JUNE 1998 பிரியமுடன்                                                     வின்சென்ட் செல்வா
20.AUG 1998 நிலவே வா                                                        ஏ.வெங்கடேஷ்
21.JAN 1999 துள்ளாத மனமும் துள்ளும்                      எழில்
22.MAR 1999 என்றென்றும் காதல்                                        மனோஜ் பட்நாகர்
23.JUNE 1999 நெஞ்சினிலே                                                        எஸ்.எ.சந்திரசேகர்
24.SEP 1999   மின்சார கண்ணா                                             கே.எஸ்.ரவிக்குமார்
25.JAN 2000 கண்ணுக்குள் நிலவு                                        பாசில்
26.MAY 2000 குஷி                                                                           எஸ்.ஜெ.சூர்யா
27.NOV 2000 பிரியமானவளே                                                 கே.செல்வபாரதி
28.JAN 2001 ஃபிரண்ட்ஸ்                                                               சித்திக்
29.APR 2001 பத்ரி                                                                                அருண் பிரசாத்
30.NOV 2001 ஷாஜகான்                                                                  ரவி
31.APR 2002 தமிழன்                                                                         மஜீத்
32.JUL 2002 யூத்                                                                          வின்சென்ட் செல்வா
33.NOV 2002 பகவதி                                                                      வெங்கடேஷ்
34.JAN 2003 வசீகரா                                                                     கே.செல்வபாரதி
35.MAR 2003 புதிய கீதை                                                            கே.பி.ஜெகன்
36.OCT 2003 திருமலை                                                                  ரமணா
37.MAR 2004 உதயா                                                                        அழகம்பெருமாள்
38.APR 2004 கில்லி                                                                           தரணி
39.AUG 2004 மதுர                                                                           மாதேஷ்
40.JAN 2005 திருப்பாச்சி                                                            பேரரசு
41.FEB 2005 சுக்ரன் (சிறப்பு தோற்றம்)                            எஸ்.எ.சந்திரசேகர்
42.APR 2005 சச்சின்                                                                       ஜான் மகேந்திரன்
43.NOV 2005 சிவகாசி                                                                    பேரரசு
44.JAN 2006 ஆதி                                                                              ரமணா
45.JAN 2007 போக்கிரி                                                                   பிரபுதேவா
46. 2007 அழகிய தமிழ் மகன்                                                 பரதன்
47. 2008 குருவி                                                                                தரணி
48. 2008 பந்தயம் (சிறப்பு தோற்றம்)                               எஸ்.எ.சந்திரசேகர்
49. 2009 வில்லு                                                                               பிரபுதேவா
50. 2009 வேட்டைக்காரன்                                                         பாபு சிவன்
51. 2010 சுறா                                                                                       எஸ்.பி.ராஜ்குமார்
52. 2011 காவலன்                                                                            சித்திக்
53. 2011 வேலாயுதம்                                                                    எம்.ராஜா
54. 2012 நண்பன்                                                                              சங்கர்
விஜய் பெற்ற விருதுகள்
1997 ம் ஆண்டு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது காதலுக்கு மரியாதை படத்திற்காக கிடைத்தது.
1998 ம் ஆண்டு தமிழக அரசின் “கலைமாமணி” விருது கிடைத்தது.
2005 ம் ஆண்டு “கில்லி” படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
2009 ம் ஆண்டு விஜய் தனது ரசிகர் மன்றங்களை, “மக்கள் இயக்கம்” என்ற பெயரில் அரசியல் அமைப்பாக மாற்றினார். 2011 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. விற்கு ஆதரவு அளித்தது.
 

Blogger news

Blogroll

About