Pages

சனி, பிப்ரவரி 04, 2012

பெயர்: உலகம்
தோற்றம்: 00 -00 -0000
மறைவு: 21 -12 -2012
மரணம்: இயற்கை ! ! !
இவண்: மாயன்கள்.
உலகம் அழியப்போகிறது என பலமுறை கூறப்பட்டபோதும், 2012 ல் இது பற்றி அதிகமாக விவாதிக்கப்படுகிறதே! ஒருவேளை உண்மையிலேயே 2012 ல் உலகம் அழியப்போகிறதா? எப்படி அழியப்போகிறது? ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? யார் இந்த மாயன்கள்…..மாயன்கள்
கி.மு. 2600 ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவில் வசித்தசெவ்விந்தியர்கள் தான் மாயன்கள் என அறியப்படுகிறது. கட்டிடக்கலை, வானியல் சாஸ்திரம், கணித அறிவு, கலாசாரம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர்களாக மாயன்கள் இருந்துள்ளனர். சூரிய, சந்திர இயக்கங்களை பதிவு செய்ய மாயன் மக்கள் வான் ஆய்வுக் கூடங்களை ஏற்ப்படுத்தி இருந்தார்கள். நவீன அறிவியலில் 1945 ம் ஆண்டுக்கு பிறகு அறியப்பட்ட பால் வெளி மண்டலம்(milky way) பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர்.
18 மாத காலண்டர்!
மாயன்கள் உருவாக்கிய காலண்டர்களில் இரண்டு வகை காலண்டர்கள் முக்கியமானவை. ஒன்று 365 நாட்களை கொண்டது . ஆண்டுக்கு 18 மாதங்கள். மாதத்திற்கு 20 நாட்கள். இந்த காலண்டரை ஹாப் (haab) காலண்டர் என்று அழைத்தார்கள். இதன் படி வருடத்திற்கு 360 நாட்கள் வரும். எஞ்சிய ஐந்து நாட்கள் அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்று நம்பினார்கள். இந்த காலண்டர்கள் சாமானியர்களின் உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டது. கி.மு. 550 ல் இந்த காலண்டர்கள் நடைமுறைக்கு வந்திருக்கலாம் என அறியப்படுகிறது.
அடுத்த வகை காலண்டர் வருடம் 260 நாட்கள் கொண்டது. ஒவ்வோர் ஆண்டுக்கும் 13 மாதங்கள். மாதத்திற்கு 20 நாட்கள். இந்த வகை காலண்டர் இஸல்கின்(isalkin) என அழைக்கப்பட்டது.
மாயன்கள் Vs 2012
2012 ல் உலகம் அழியப்போகிறது என்ற சர்ச்சைக்கு காரணம் இவர்களின் காலண்டர் தான். அதாவது மாயன்கள் உருவாக்கிய காலண்டர் டிசம்பர் 21 – 2012 தேதியுடன் முடிவடைகிறது. இதன் அடிப்படையில் உருவான எண்ணம் தான், இந்த தேதியில் உலகம் அழிந்துவிடும் என்பது. வானவியல் சாஸ்திரத்தில் சிறந்து விளங்கியதாலும், நுணுக்கமான காலண்டரை உருவாக்கியவர்கள் என்பதாலும் இந்த விஷயம் விவாதப்பொருளாக விளங்குகிறது.
தொடர்பான கட்டுரைகள்:
நோக்கு வர்மம்
உலக அழிவு பற்றி அறிவியல் தரும் விளக்கம்
மாயன் காலண்டர் கி.மு. ஆகஸ்ட் 11 – 3114 ல் தொடங்கி கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே முடிந்துவிடுகிறது என்ற மாறுபட்ட கருத்தும் உண்டு. மேலும் மாயன்களின் எழுத்துகளை படித்து உணர முடியாததால் பலதரப்பினரிடையே பல்வேறு வித கருத்தும் நிலவுகிறது.
உலகம் அழியப்போகிறது என்றவுடன் இரண்டு கேள்விகள் தோன்றுகிறது. அதாவது பூமியின் அழிவு பூமியிலேயே ஏற்படுமா? அல்லது பூமிக்கு அப்பால் உள்ள சக்தியினால் உலகம் அழியுமா?.
உலகம் மூன்று விதங்களில் அழியலாம்.
1 . கடலில் ஆழிப்பேரலை எனப்படும் சுனாமியால் நிகழலாம்.
2 . பூமிக்கடியில் கனன்று கொண்டிருக்கும் எரிமலைகளால் நிகழலாம்.
3 . விண்வெளியிலிருந்து எரிகற்கள் பூமியை தாக்குவதன் மூலம் நிகழலாம்.
எரிமலை
பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது தான் பூமி. இந்த பூமி இருக்குமிடம் என்பது காட்சிக்கெட்டாத அதிசயமாகும். பேரண்டத்தில் பல்லாயிரக்கணக்கான அண்டங்கள் உள்ளன. அந்த அண்டங்களில் ஒன்றில் தான் சூரியன், பூமி போன்ற சிறியதும் பெரியதுமான விண்மீன்கள் இருக்கின்றன.
700 கோடி மனிதர்களையும், பலகோடி ஜீவராசிகளையும் கொண்ட பூமி முழுவதையும் எரிமலைகளால் பொசுக்கிவிட முடியாது.
எரிகல்
ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட விண்கற்களால் தான் பூமிக்குபாதிப்பு ஏற்படும். பூமியை தாக்கக்கூடிய, பூமிக்கு அருகில் உள்ள எரிகற்களை குறைந்தது பத்து வருடங்களுக்கு முன்கூட்டியே அறியக்கூடிய அளவில் அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது. எனவே எரிகற்கலால் இப்போதைக்கு பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கடல்
இந்த உலகையே மூழ்கடிக்கும் சக்தி கடலுக்கு நிச்சயம் உண்டு. ஏனெனில் இந்த பூமி 70 % கடலால் சூழப்பட்டுள்ளது. கடற்கரையில் நின்று கொண்டு இந்த கடல் நீரெல்லாம் நிலப்பரப்பை நோக்கி வரப்போகிறது என்று கற்பனை செய்து பார்த்தால்………..
இது சாத்தியப்பட்ட விசயமாகவே தற்போதைய நிலைமை உள்ளது. பனிமலைகள் உருகிக்கொண்டே வருகின்றன. இதனால் கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டேவருகிறது. பருவம் தவறி மழையும், புயலும் வீசுகின்றது. புவி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் விளைவுகளால் டிசம்பர் 21 – 2012 எனும் ஒரே நாளில் உலகம் முழுவதும் சுனாமி ஏற்ப்பட்டு அழியப்போவதில்லை. ஆனால் அழிவிற்கான அறிகுறிகள் தொடங்கியுள்ளன. மனிதன் தன் வாழ்க்கை தரத்தை உயர்திக்கொள்வதற்கு செய்யும் காரியங்கள், மனித குலத்தையே தொலைத்து கொள்வதற்கு காரணமாக உள்ளது.
இந்த உலகில் பலகோடி ஜீவராசிகள் இருந்தாலும் மனிதன் மட்டுமே பூமிக்கு எதிரியாக இருக்கிறான். மனிதன் இல்லாத பூமிக்கு ஆயுசு கெட்டி. இனி மனிதன் தன் சந்ததிக்கு சொத்து சேர்க்க செவ்வாயிலும், வியாழனிலும் தான் நிலத்தை வாங்க வேண்டும்.
எது எப்படியோ, உலகின் மரணம் இயற்கையானதாக இருக்காது, அது மனிதன் செய்யும் கொலையாகத்தான் இருக்கும் என்பது சர்வ நிச்சயம்.

0 கருத்துகள்:

 

Blogger news

Blogroll

About